ஜைன துறவிகள் எதிர்ப்பு- அனுஷ்கா நடித்த 'பாஹூபாலி'க்கு சிக்கல்

|

ஹைதராபாத்: ஜைன மதத் துறவிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக அனுஷ்கா நடித்துள்ள பாஹூபலி படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அனுஷ்கா, பிரபாஸ், ராணா நடித்து தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் பாஹூபாலி. நான் ஈக்குப் பிறகு எஸ் எஸ் ராஜமவுலி இயக்கும் படம் இது.

‘பாஹூபாலி' படத்தில் வாள் சண்டை, கத்தி சண்டை போட்டு அதிரடி ஆக்ஷனில் நடிக்கிறார்கள் அனுஷ்கா, பிரபாஸ் மற்றும் ராணா ஆகியோர். ராணா இதில் அதிரடி வில்லனாக வருகிறார்.

ஜைன துறவிகள் எதிர்ப்பு- அனுஷ்கா நடித்த 'பாஹூபாலி'க்கு சிக்கல்

பாஹூபாலி என்பது ஜைன துறவியைக் குறிக்கும் பெயர் என்றும் அமைதியே உருவான அந்த துறவியின் பெயரில் எடுக்கும் படத்தில் வாள் சண்டை போன்ற வன்முறை காட்சிகளை வைப்பது கண்டிக்கத்தக்கது என்றும் ஜைன துறவிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எனவே இந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகிறார்கள்.

படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோருக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பியுள்ளார்கள்.

பாஹூபாலி என்ற துறவிக்கும் படத்தின் கதைக்கும் சம்பந்தமில்லை என்பதால் படத்தின் தலைப்பை மாற்ற யோசித்து வருகிறாராம் இயக்குநர் ராஜமவுலி.

 

Post a Comment