'நிமிர்ந்து நில்' படத்தில் சமுத்திரக்கனி இயக்கத்தில் நடித்த அமலா பால், அடுத்து சமுத்திரக்கனி தயாரித்து நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி, அமலா பால் நடித்திருக்கும் 'நிமிர்ந்து நில்' படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
சென்சார் முடிந்தவுடன் படத்தின் வெளியீட்டு தேதியினை அறிவிக்க இருக்கிறார்கள். படத்தை இம்மாதமே வெளியிட திட்டமிட்டுள்ளனர். அநேகமாக பிப்ரவரி 28 வெளியாகும் எனத் தெரிகிறது.
'நிமிர்ந்து நில்' படத்தைத் தொடர்ந்து சமுத்திரக்கனி ஒரு படத்தை தயாரித்து, நடிக்கவிருக்கிறார். 'கீதாரி' என்ற பெயரில்தான் உருவாக்கி வைத்திருக்கும் திகில் கதையை சொந்தமாக தயாரிக்கிறார் சமுத்திரகனி. சமூக சிந்தனை கருத்துக்களை சொல்லும் கதையாம் இது.
இப்படத்தில் நாயகியாக நடிக்கவிருக்கிறார் அமலாபால். சமுத்திரக்கனி, அமலா பால் ஆகியோரோடு கிஷோர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். திகில் பின்னணியில் இப்படத்தின் கதை, திரைக்கதை அமைந்து இருக்கிறது. ஒரே கட்டமாக இப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
படத்தை சமுத்திரக்கனியே இயக்குகிறாரா... வேறு யாரையாவது வைத்து இயக்குகிறாரா என்பது இன்னும் முடிவாகவில்லை.
+ comments + 1 comments
vasanam pesiye kolluvaney
Post a Comment