சென்னை: தன் பெயரில் போலியாக ட்விட்டர் பக்கங்களை உருவாக்கி செயல்படுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சிம்பு, அதுகுறித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
நடிகர்கள், நடிகைகள் பெயரில் டுவிட்டர், பேஸ்புக்கில் போலி அக்கவுண்ட்களை சிலர் தொடங்கி, அதில் சம்பந்தப்ட்ட நடிகர் நடிகைகளே நேரடியாக ஈடுபடுவது போல காட்டிக் கொள்கின்றனர்.
ஏற்கெனவே திரிஷா, நயன்தாரா பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு, அவர்கள் புகார் செய்த பிறகு அவை முடக்கப்ட்டன.
சமீபத்தில் காமெடி நடிகர்கள் பரோட்டா சூரி, வி.டி.வி கணேஷ் பெயரிலும் மோசடி நடந்தது. தற்போது சிம்பு பெயரில் நடக்கிறது.
இதுகுறித்து சிம்பு வெளியிட்ட அறிக்கை:
ட்விட்டரில் ஐ அம் எஸ்டிஆர் என்ற பெயரில் என் அதிகாரபூர்வ கணக்கு உள்ளது. ஆனால் என் பெயரில் சில போலி ட்விட்டர் கணக்குகளும் இருக்கின்றன. ரசிகர்களும் பத்திரிகையாளர்களும் இந்த போலி கணக்கை நம்பவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
என்னைப் பற்றிய செய்திகளையும் தகவல்களையும் எனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் உடனுக்குடன் போட்டு வருகிறேன். என் பெயரில் உள்ள போலி பக்கங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment