சென்னை: பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்திற்கு மாறியுள்ளார். இந்நிலையில் நடிகர் சிம்பு யுவனுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் மகனும், பிரபல இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்திற்கு மாறியதாக பேசப்பட்டது. இந்நிலையில் இதை அவரே ட்விட்டரில் நேற்று உறுதி செய்தார்.
ஆமாம் நான் இஸ்லாத்தை பின்பற்றுகிறேன். அதற்காக பெருமைப்படுகிறேன் என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார். யுவனின் இந்த ட்வீட்டைப் பார்த்த நடிகர் சிம்பு அவருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிம்பு யுவனிடம் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது,
என்னவாக இருந்தாலும் சரி உங்களுக்கு எனது அன்பும், ஆதரவும் எப்பொழும் உண்டு என்று தெரிவித்துள்ளார். பதிலுக்கு யுவன் நன்றி பிரதர் என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment