டெல்லி:அமெரிக்காவின் பிரபலமான அழகுசாதன தயாரிப்பு நிறுவனமான ஏவோன், தனது தயாரிப்புகளின் இந்தியாவின் முதல் விளம்பரத்தூதுவராக நடிகை அசினை நியமித்துள்ளது.
நேற்று டெல்லியில் ஏவோன் தனது புதிய அழகுசாதன பொருட்களை அறிமுகப்படுத்தியதுடன் பாலிவுட் கதாநாயகி அசினை இந்தியாவிற்கான ஏவோனின் விளம்பர தூதராகவும் அறிவித்தது.
இவ்விழாவில் பேசிய ஏவோனின் இந்திய மேலாளர் உஜ்வால் முக்கோபத்யா "சிறந்த பெண்மணிக்கு எடுத்துக்காட்டாக திகழும் அசினின் அழகானது அவருடைய வெளிப்புற தோற்றத்தில் மட்டுமல்லாமல் மனதிலும் இருப்பதால்தான் அவர் ஏவோனுக்கான சிறந்த தேர்வாக இருக்கிறார்" என்று கூறினார்.
இவ்விழாவில் பேசிய அசின் ,ஒரு படத்திற்கான கால அவகாசத்தை விட அதன் தனித்தன்மையையே தான் விரும்புவதாகவும்,மேலும் சிறந்த கதையாக இருந்தால் யாருடனும் நடிக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.
தற்போது அவர் ஆல் இஸ் வெல் என்ற படத்தில் உமேஷ் சுக்லாவுடன் நடித்து வருகிறார்.
Post a Comment