தேர்தல் 2014: யாருக்கும் ஆதரவில்லை.. நடுநிலை வகிக்க ரஜினி முடிவு!

|

சென்னை: இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ வாய்ஸ் தரவோ போவதில்லை. நடுநிலை வகிக்கப் போவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. தொடர்ந்து கடிதங்கள் அனுப்பியும், கூட்டங்கள் போட்டு தீர்மானங்கள் நிறைவேற்றியும் இதனை ரஜினிக்கு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த ஆண்டு நடக்கும் பொதுத் தேர்தலில் ரஜினி நிச்சயம் ஒரு அரசியல் முடிவு எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் தரப்பில் சில மாவட்டங்களில் கூட்டங்கள் போட்டு தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள்.

தேர்தல் 2014: யாருக்கும் ஆதரவில்லை.. நடுநிலை வகிக்க ரஜினி முடிவு!

ரசிகர்களின் மனநிலை, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் தொடர்ந்து ரஜினிக்கு அனுப்பி வந்தனர் ரசிகர்கள்.

தமிழக அரசியலில் உள்ள அனைவருமே இப்போது ரஜினியின் நண்பர்களாகிவிட்டார்கள்.

அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதராக ரஜினியை முன்னிறுத்துவன் உள்நோக்கம், ரஜினி அரசியலுக்கு வரவே கூடாது என்பதுதான்.

ஜெயலலிதா, கருணாநிதி, நரேந்திர மோடி, முக ஸ்டாலின், பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி, வைகோ, திருமாவளவன், விஜயகாந்த் என அனைவருடனும் இணக்கமாகவே உள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரஜினி பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்லியது நினைவிருக்கலாம்.

எனவே இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு காட்டாமல், நடுநிலை வகிக்க முடிவு செய்துள்ளார். எனவே தனக்கு கடிதம் அனுப்பிய ரசிகர் மன்ற நிர்வாகிகளை அவரவருக்குப் பிடித்த கட்சியில் பணியாற்றலாம் என்று கூறிவிட்டாராம்.

 

+ comments + 1 comments

Anonymous
24 March 2014 at 03:19

pozhakka therintha aalu pa ivaru

Post a Comment