கடனை கொடுக்கவில்லை: ஏலத்திற்கு வரும் கௌதம் மேனன் சொத்துக்கள்

|

சென்னை: வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காததால் இயக்குனர் கௌதம் மேனனின் சொத்துக்கள் ஏலத்திற்கு வருகிறது.

காக்க காக்க, விண்ணைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் கௌதம் மேனன். அவர் சொந்தமாக பட நிறுவனம் துவங்கினார். அந்த நிறுவனம் மூலம் நடுநிசி நாய்கள், வெப்பம் உள்ளிட்ட படங்களை தயாரித்தார். ஆனால் அந்த படங்கள் ஓடவில்லை.

கடனை கொடுக்கவில்லை: ஏலத்திற்கு வரும் கௌதம் மேனன் சொத்துக்கள்

இந்நிலையில் அவருக்கும் தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கும் இடையே பணப் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து குமார் நீதிமன்றம் வரை சென்றார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கௌதம் மேனனின் சொத்துக்களை ஏலத்தில் விட உத்தரவிட்டுள்ளது.

கௌதம் மேனன் தனக்கு சொந்தமாக இந்திரா நகர் முதல் மெயின் ரோட்டில் 7 ஆயிரத்து 91 சதுர அடியில் உள்ள சொத்தை அடமானம் வைத்து தான் கடன் பெற்றாராம். இந்நிலையில் கடனை திருப்பிக் கொடுக்காததால் அவரது சொத்தை வங்கி ஏலத்தில் விடுகிறது. இந்த சொத்தின் மதிப்பு ரூ.12.26 கோடி ஆகும்.

கௌதம் அஜீத் குமாரை வைத்து படம் ஒன்றை எடுக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment