சென்னை: சிவாஜி நாயகிக்கு பரதேசி இயக்குனர் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு போக ஆர்யமான நடிகர் தான் காரணமாம்.
தளபதி, சூப்பர் ஸ்டார், சீயானோடு ஜோடி சேர்ந்து நடித்த சிவாஜி நாயகிக்கு தற்போது கோலிவுட்டில் வாய்ப்பே இல்லை. அவர் நடிப்பில் வெளியான இளவரசி படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை.
இந்நிலையில் அவர் பரதேசி இயக்குனரின் படத்தில் கரகாட்டக்காரியாக நடிக்கப் போவதாக செய்திகள் வந்தன. ஆனால் அதன் பிறகு சிவாஜி நாயகி இல்லை நாட்டாமை மகள் தான் கரகாட்டக்காரியாக நடிக்கப் போகிறார் என்று அறிவிக்கப்பட்டது.
சிவாஜி நடிகையை நடிக்க வைக்க நினைத்த இயக்குனரை ஆரியமான நடிகர் அதான் பிக்கப்-டிராப்காரர் அணுகி அந்த நடிகையை எடுக்காதீங்க என்று ஒரு பிட்டை போட்டுள்ளார். உடனே நம்ம உயரமான நான் ரெட் மேன் ஹீரோ இயக்குனரிடம் நம்ம நாட்டாமை மகளையே நடிக்க வைக்கலாமே என்று தெரிவித்துள்ளாராம்.
அதன் பிறகே இயக்குனர் நாட்டாமை மகளை ஒப்பந்தம் செய்தாராம். நான் அப்படி என்ன செய்தேன். கோலிவுட்டில் என்னை யாருமே ஆதரிக்க மாட்டேன் என்கிறார்களே என்று சிவாஜி நாயகி புலம்புகிறாராம்.
Post a Comment