நேற்று என் பிறந்த நாள் என்று வந்த செய்திகளில் உண்மையில்லை. மே 25தான் என் பிறந்த நாள் என்று கவுண்டமணி கூறியுள்ளார்.
நகைச்சுவையில் தனக்கென்று புதிய பாணி வகுத்து, இன்றுவரை அதில் வெற்றிகரமாகத் திகழ்பவர் கவுண்டமணி.
இப்போது வாய்மை மற்றும் 49 ஓ படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
நேற்று மார்ச் 18-ம் தேதி அவருக்குப் பிறந்த நாள் என தகவல் பரவியது. தகவல் களஞ்சியமான விக்கிபீடியாவிலும் அவரைப் பற்றிய விவரங்களில், பிறந்த நாள் மார்ச் 18 என்றும், வயது 75 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் இந்த தகவல்களை மறுத்துள்ளார் கவுண்டமணி.
இவை அனைத்துமே பொய்யான தகவல்கள் என்றும், தான் பிறந்தது மே 25-ல் தான் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல பிறந்த ஆண்டும் தவறானது. தனக்கு அவ்வளவு வயதாகிவில்லை என்றும் கூறியுள்ளார்.
'என்னய்யா இவனுங்க தொல்ல தாங்கலயேப்பா... வயசு, பிறந்த நாளையெல்லாம் தப்புத் தப்பா போட்டுட்டு, சினிமாகாரங்க பூ விசாரிக்கிற அளவுப் பண்ணிட்டாங்களே என்று வருத்தப்பட்டாராம் கவுண்டர்.
Post a Comment