''அப்டீன்னா நான் பேண்ட் போட்டு, சுவிஸ்ஸில் டான்ஸ் ஆடியது வேஸ்ட்டா அங்கிள்...??''

|

சென்னை: தான் மாடர்ன் டிரஸ் போட்டு வெளிநாட்டில் டூயட் பாடியது வீணாகிவிட்டதே என்று இயக்குனரும், ஹீரோவுமான தாடிக்காரர் கவலைப்படுகிறாராம்.

இதுவரை கிராமத்து கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த இயக்குனரும், ஹீரோவுமான தாடிக்கார நடிகர் முதல் முறையாக படைக்கும் கடவுளின் பெயர் கொண்ட படத்தில் மாடர்னாக நடித்தார்.

படத்தில் அவர் மாடர்ன் டிரஸ் போட்டதுடன், வெளிநாட்டுக்கு எல்லாம் சென்று ஹீரோயினுடன் டூயட் பாடினார். முதல் முறையாக என் படத்திற்காக வெளிநாடு சென்று வந்தேன் என்று மகிழ்ச்சியாக கூறினார். ஆனால் பாவம் அவர் மாடர்ன் அவதாரம் எடுத்த படம் சரியாகப் போகவில்லை.

இதனால் அவர் கவலை அடைந்துள்ளாராம். இந்த சூட், பூட்டு எல்லாம் நமக்கு ஒத்து வராது இனி கிராமத்து கதாபாத்திரம் மட்டும் தான் என்று கன்டிஷனாக சொல்லிவிட்டாராம்.

அவரை வைத்து படத்தை எடுத்த தயாரிப்பாளர் நஷ்டப்பட்டதால் தனக்கு கடனை அடைக்க மேலும் ஒரு படத்தில் நடிக்க கேட்டாராம். அதற்கு நடிகர் பரதேசி இயக்குனரின் படத்தில் நடித்து முடித்துவிட்டு வருகிறேன் என்று கூறியுள்ளாராம்.

 

Post a Comment