சென்னை: குக்கூ படத்தின் வெற்றி பெற்றதால், அதன் இயக்குநர் ராஜூ முருகனுக்கு புதிய டஸ்டர் காரை பரிசளித்துள்ளனர் தயாரிப்பாளர்கள்.
பாக்ஸ் ஸ்டார் - தி நெக்ஸ்ட் பிக் பிலிம்ஸ் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்கள், பாராட்டுகளைச் சந்தித்துள்ள படம் குக்கூ. இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றதாக அதன் தயாரிப்பாளர்கள் அறிவித்து, நேற்று அதைக் கொண்டாடும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தினர்.
அப்போது குக்கூ படத்தை இயக்கிய ராஜூ முருகனுக்கு புதிய டஸ்டர் காரை பரிசளிப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவித்தனர்.
அதே மேடையில், தங்களின் அடுத்த படத்தை இயக்கப் போவதும் ராஜு முருகன்தான் என தி நெக்ஸ் பிக் பிலிம்ஸ் சார்பில் தெரிவித்தனர்.
அப்போது ஒரு நிருபர், "இப்படித்தான் ஆரம்பத்தில் எல்லா தயாரிப்பாளர்களும் ஆர்வத்துடன் அடுத்த படமும் இவருக்கே என்பார்கள். ஆனால் கடைசியில் சொன்னபடி செய்ய மாட்டார்கள். கொடுத்த அட்வான்ஸைக் கூட கேட்காமல் அமைதியாக ஒதுங்கிவிடுவார்கள். நீங்கள் எப்படி?" என்றார்.
கொஞ்சம் ஜெர்க் ஆன தயாரிப்பாளரும் இயக்குநரும்... "உண்மையாகவே அடுத்த படத்தையும் நான்தான் இயக்குகிறேன். கதை ரெடி," என்றார்.
Post a Comment