சீனாவில் தயாராகும் கோச்சடையான் மாஸ்டர் பிரின்ட்!

|

சென்னை: ரஜினியின் கோச்சடையான் படத்தின் மாஸ்டர் பிரிண்ட் சீனாவில் தயாராகிறது. இதனைப் பெற்று வர சவுந்தர்யா ரஜினிகாந்த் சீனாவுக்குச் சென்றுள்ளார்.

போட்டோ ரியலிஸ்டிக் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள கோச்சடையான் படத்தின் 3 டி பணிகள் சீனாவில் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் நிறைவடையும் நிலைக்கு வந்துள்ளன.

இப்போது ட்ரைலரில் பார்த்ததை விட தத்ரூபமான காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளதாக சவுந்தர்யா ரஜினி பிரஸ் மீட்டில் சொல்லியிருந்தார்.

சீனாவில் தயாராகும் கோச்சடையான் மாஸ்டர் பிரின்ட்!

ஹாலிவுட் படங்களுக்குப் பணியாற்றும் குழுவினர் சீனாவில் வைத்து கோச்சடையானின் இறுதிக்கட்டப் பணிகளைச் செய்துள்ளனர்.

இப்போது படத்தை சென்சாருக்கு அனுப்ப வேண்டியிருப்பதால், அதன் மாஸ்டர் பிரிண்டை வாங்கி வர சவுந்தர்யா நேற்று சீனாவுக்குப் பயணமானார்.

இம்மாத இறுதிக்குள் படத்தின் இன்னுமொரு ட்ரைலரை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

 

Post a Comment