'ஓட்டுப் போடுவது நம் கடமை’... விழிப்புணர்வு பிரச்சாரத்தில் அமீர்கான்

|

டெல்லி: நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் பிரச்சார விழிப்புணர்வு விளம்பரத்தில் பிரபல ஹிந்தி நடிகர் அமீர்கான் நடிக்க உள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற தனது 49வது பிறந்தநாள் விழாவில் பேசிய அமீர்கான், ‘நான் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பட்ட முறையில் ஆதரவு தெரிவிக்க மாட்டேன். அதற்கான பிரச்சாரக் கூட்டங்களிலும் பங்கேற்க மாட்டேன்' எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், வாக்களிக்கத் தகுதியான வயதுடையவர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் அப்போது வலியுறுத்தியிருந்தார்.

'ஓட்டுப் போடுவது நம் கடமை’... விழிப்புணர்வு பிரச்சாரத்தில் அமீர்கான்

இந்நிலையில் தேர்தலில் வாக்களிப்பதற்கான அவசியத்தை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் தயாரிக்கும் விழிப்புணர்வு விளம்பரத்தில் அமீர்கான் நடிக்க உள்ளார். ஏற்கனவே இந்த விளம்பரத்தில் நடிக்க பிரபல விளையாட்டு வீரர்களான செய்னா நெஹ்வால், டோணி மற்றும் மேரிகோம் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக அமீர்கான், சுற்றுலாத்துறை பிரச்சாரத்திலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத் துறை பிரச்சாரத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment