சென்னை: கௌதம் மேனன் படத்திற்காக அஜீத்துக்கு ஷாருக்கானின் பிட்னஸ் டிரெய்னர்கள் பயிற்சி அளிக்கிறார்களாம்.
அஜீத் கௌதம் மேனன் படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஒரு கதாபாத்திரம் நல்லவனாகவும், மற்றொரு கதாபாத்திரம் கெட்டவனாகவும் இருக்கும். இந்த படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக அதுவும் கெத்தான அதிகாரியாக வருகிறாராம்.
இதற்காக அவர் ஏற்கனவே ஜிம்முக்கு சென்று 7 கிலோ வரை எடையை குறைத்துள்ளார். ஏற்கனவே பல்வேறு விபத்துகளில் சிக்கிய அஜீத் முதுகுவலி, கால்வலியால் அவதிப்படுவதால் அதிகமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்தால் பிரச்சனையாகிவிடும்.
அதனால் ஷாருக்கான் உள்ள பாலிவுட் நட்சத்திரங்களின் பிட்னஸ் டிரெய்னர்களை வரவழைத்து அஜீத்துக்கு பயிற்சி அளிக்கிறார்களாம்.
பாலிவுட்டில் நடிகர் அனைவருமே பாடியை பில்ட்அப் செய்ய முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment