சென்னை: மோக்கியா ஹீரோ அவதாரம் எடுத்துள்ளது அவருடன் நடித்த ஹீரோக்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து காமெடியில் கொடி கட்டிப் பறக்கிறார் மோக்கியா. சில படங்கள் ஹீரோவை விட அவருக்காக ஓடியது என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்துவிட்டார். இந்நிலையில் அவர் ஹீரோவாகவும் பதவி உயர்வு பெற்றுவிட்டார். ஹீரோவாகிவிட்டதால் ஜிம்மிக்கு சென்று கும்மென்று ஆகியுள்ளார்.
இந்நிலையில் அவருடன் நடித்த ஹீரோக்களுக்கு மோக்கியா ஹீரோவானது சுத்தமாக பிடிக்கவில்லையாம். காமெடியன்கள் ஹீரோவானால் காணாமல் போய்விடுவார்கள் என்று சில ஹீரோக்கள் மோக்கியாவிடம் தெரிவித்தார்களாம். மேலும் சில ஹீரோக்கள் மோக்கியாவுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்களாம். மோக்கியா ஹீரோவானதை அடுத்து தங்கள் படங்களில் பரோட்டா நடிகரை போடுமாறு கூறுகிறார்களாம் சில ஹீரோக்கள்.
ஹீரோக்களின் இந்த செயல் மோக்கியாவுக்கு தெரிய வந்துள்ளது. ஹீரோக்கள் காண்டுல இருக்கிறார்கள். அவர்கள் மட்டும் ஹீரோயின்களோடு பாட்டு பாடி டான்ஸ் ஆட நான் மட்டும் அவர்களுக்கு நண்பேன்டாவாகவே இருக்கணுமா என்கிறாராம் மோக்கியா. இப்படி தான் நான் சினிமாவில் நடிக்க வந்தபோது டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் எல்லாம் நடிக்க வந்துவிட்டான் என்று நக்கலடிதத்தார்கள். இப்போது காமெடியன் எல்லாம் ஹுரோவாகிவிட்டான் என்று கிண்டல் செய்கிறார்கள். நான் எப்படி காமெடியில் ஜெயித்தேனோ அதே போன்று ஹீரோவாகவும் ஜெயித்துக் காட்டுவேன் என்று மோக்கியா தனது நண்பர்களிடம் கூறி வருகிறாராம்.
Post a Comment