சென்னை: தமிழ்ப் படமான காவியத் தலைவனுக்காக ஹாலிவுட் பட வாய்ப்பையே இழந்திருக்கிறேன், என்று இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தெரிவித்தார்.
வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் காவியத் தலைவன் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.
நாடகக் கலையைப் பின்னணியாகக் கொண்ட படம் என்பதால் இசைக்கும் பாடல்களுக்கும் முக்கியத்துவம் தந்துள்ளனர்.
இந்தப் படத்தின் பணியாற்றியது குறித்து ஏ ஆர் ரஹ்மான் கூறுகையில், "இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோதே, இசைக்கு எந்த அளவு இடமிருக்குன்னு புரிஞ்சிக்கிட்டேன். ஒவ்வொருத்தரும் கடுமையா உழைச்சிருக்காங்க.
இந்தப் படப் பாடல்கள் பெரிய சவாலாய் அமைந்தன. மொத்தம் 8 பாடல்கள். ஒவ்வொரு பாடலுக்குள்ளேயும் பல பாடல்கள் இடம்பெறும். சின்னச் சின்னதா வர்ற பாடல்களையும் சேர்த்தா 20 பாடல்கள் வரும்.
இந்தப் படத்தை நான் ஒப்புக்கிட்டபோது, ஒரு ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியிருந்தேன். அது ரொம்ப டார்க்கான படம். ஆனால் வசந்த பாலன் படத்தை ஒப்புக் கொண்டதும், ஹாலிவுட் படத்தை விட்டுட்டேன்," என்றார்.
Post a Comment