சென்னை: தயாநிதி அழகிரி தயாரிப்பில், சன்னி லியோன் குத்தாட்டம் போடும் முதல் தமிழ்ப் படமான வடகறியிலிருந்து விலகினார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
யுவனின் பிஸி ஷெட்யூல் காரணமாக அவரால் இந்தப் படத்தில் தொடர முடியவில்லை என்றும், அவருக்குப் பதில் அனிருத்திடம் சவுண்ட் எஞ்ஜினியர்களாகப் பணியாற்றிய இரட்டையர்களான விவேக் - மெர்வின் இசையமைப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை:
யுவன் சங்கர் ராஜாவின் பிஸியான ஷெட்யூல் காரணமாக வடகறி படத்தில் தொடர்ந்து அவருடன் பணியாற்ற முடியவில்லை. இந்தப் படத்துக்காக அவர் ஒரு அருமையான மெலடிப் பாடல் தந்துள்ளார். அதை நிச்சயம் இந்தப் படத்தில் பயன்படுத்துவோம்.
படத்தை விரைவாக முடிக்க வேண்டி, யுவனுக்கு பதில் புதிய இரட்டையர்களை இப்படத்துக்கு இசையமைப்பாளராக்கியுள்ளோம்.
இவர்களில் விவேக் சிவாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இசையமைப்பாளர் அனிருத். அனிருத்தின் சவுன்ட் எஞ்ஜினியராகப் பணியாற்றியவர் விவேக் சிவா. இவரும் மெர்வின் சாலமனும் இணைந்து இரட்டையர்களாக இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளனர். நான்கு பாடல்கள் மற்றும் படத்தின் பின்னணி இசையை விவேக் - மெர்வின் தந்துள்ளனர்.
இருவருமே சென்னையைச் சேர்ந்தவர்கள். ஏஆர் ரஹ்மானின் இசைக் குழுவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள்," என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment