நான் சிகப்பு மனிதன் இசை- வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி

|

சென்னை: விஷால் நடித்துள்ள நான் சிகப்பு மனிதன் புதிய படத்தின் இசைத் தட்டை நேற்று காலை தனது போயஸ் கார்டன் இல்லத்தில் வைத்து வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ரஜினி நடித்து 1985-ல் வெளியான படம் நான் சிகப்பு மனிதன். இந்தத் தலைப்பை விஷால் தன் படத்துக்கு ரஜினி மற்றும் தயாரிப்பாளரின் அனுமதியோடு பயன்படுத்திக் கொண்டார்.

நான் சிகப்பு மனிதன் இசை- வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி

படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் அரங்கில் நடந்தது. அதற்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வீட்டுக்குப் போய் அவர் கையால் இசைத் தட்டை வெளியிட வைத்தனர்.

விஷால், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், இயக்குநர் திரு உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முன்னதாக படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல் காட்சிகளை ரஜினிக்கு அவர் வீட்டிலேயே போட்டுக் காட்டினர்.

ட்ரைலரைப் பாராட்டிய ரஜினி, தூக்கத்தில் நடக்கும் வியாதியான Narcolepsy பிரச்சினையை மையப்படுத்தி படம் எடுத்திருப்பது வித்தியாசமான முயற்சி என்றும், புதிய விஷயங்களை ஆதரிப்பதில் நடிகர் விஷால் காட்டும் அக்கறைக்கு பெரிய வெற்றிகள் கிடைக்கும் என்றும் வாழ்த்தினார்.

ஜிவி பிரகாஷின் இசை, இதயம் உன்னைத் தேடுதே.. பாடல் படமாக்கப்பட்ட விதம், அதில் லட்சுமி மேனனின் நடிப்பு ஆகியவற்றையும் பாராட்டத் தவறவில்லை.

 

Post a Comment