மும்பை: சொகுசு பங்களா கட்ட ஏழைகளின் நிலத்தை ஆக்கிரமித்தார் என நடிகர் ஆமீர்கான் மீது புகார் எழுந்துள்ளது.
சினிமாக்களில் நகருக்கு மத்தியில் ஏழைகள் குடியிருப்பார்கள். ஒரு பணக்காரர் அந்த இடத்தை வளைக்க விரும்புவார். உடனே அடியாட்கள் வந்து புல்டோசர் விட்டு இடிப்பார்கள். மக்கள் ஹீரோவிடம் முறையிடுவார்கள்.
கிட்டத்தட்ட இப்படியொரு சமாச்சாரம்தான் இப்போது மும்பையில் நடந்திருக்கிறது. என்ன இங்கு ஹீரோவாக நடித்தவர் நிஜத்தில் மக்களுக்கு வில்லனாகிவிட்டார்.
மும்பை பாந்த்ரா பகுதியில் ஒரு சொகுசு பங்களா கட்ட ஆமீர்கான் திட்டமிட்டுள்ளார். 20 ஆயிரம் சதுர அடியில் இந்த பங்களா உருவாகிறது.
இதற்காக அங்குள்ள ஹவுசிங் சொசைட்டியிடம் ஒப்பந்தம் போட்டு அப்பகுதியில் குடியிருப்பவர்களை காலி செய்ய வைக்கும்படி வற்புறுத்தினாராம் ஆமீர்கான். ஆனால் பவேலா என்ற 87 வயது மூதாட்டி உள்ளிட்ட 5 பேர் மட்டும் வீட்டை காலி செய்ய மறுத்து விட்டனராம்.
மேலும் ஆமீருக்காக மக்களை அப்பகுதியை விட்டு வெளியேற்றும் ஹவுசிங் சொசைட்டியின் நடவடிக்கையை எதிர்த்து மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஆமீரின் இந்த செயலை எந்த 'சத்யமேவ ஜெயதே'-வில் விவாதிப்பது? என்ற விமர்சனமும் கிளம்பியுள்ளது (மக்கள் பிரச்சினைகளை அலச ஆமீர்கான் நடத்தும் டிவி நிகழ்ச்சி சத்யமேவ ஜெயதே).
ஆமீர்கான் மறுப்பு
இந்த நிலையில், தன் மீதான நில அபகரிப்பு குற்றச்சாட்டை ஆமீர்கான் மறுத்துள்ளார்.
Post a Comment