பாலிவுட்டில் சில இந்திப் படங்கள் இயக்கியுள்ள ஸ்ரீதர் ராகவன்தான் அஜீத்தின் அடுத்த படத்துக்கு வசனம் எழுதப் போகிறார்.
தம் மரோ தம்ஸ காக்கி போன்ற படங்களுக்கு வசனம் எழுதியவர் ஸ்ரீதர் ராகவன். சென்னைக்காரர்தான். இந்தியில் சமீபத்தில் வந்த ஏஜென்ட் வினோத் உள்பட சில படங்களையும் இயக்கியுள்ளார்.
அஜீத் - கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் வசனகர்த்தாவாக ஸ்ரீதரைத்தான் நியமித்துள்ளனர்.
இதனை உறுதி செய்த ஸ்ரீதர் ராகவன், "கவுதம் மேனன் இயக்கும் அஜீத் படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதுப் பணி மிக சுவாரஸ்யமாக உள்ளது. மிக அற்புதமான கூட்டணியில் இணைந்திருக்கிறேன்," என்று ட்விட் செய்துள்ளார்.
இந்தப் படம் ஒரு போலீஸ் கதை. ஏற்கெனவே இதுமாதிரி படங்களுக்கு எழுதிய அனுபவம் உள்ளவர் என்பதாலேயே ஸ்ரீதர் ராகவனை அழைத்தாராம் கவுதம் மேனன்.
Post a Comment