அனிருத் இசைக்கு ரசிகன் நான். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் அவரது ஆர்வம் அவரை பெரிய இடத்துக்குக் கொண்டு செல்லும் என்றார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் 'மான் கராத்தே'. இந்தப் படத்திற்கு கதை எழுதி எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஷங்கர், "இந்த விழாவிற்கு நான் அனிருத்தின் ரசிகனாக வந்திருக்கிறேன். அவரின் இசையில் வெளிவந்த எல்லா பாடல்களும் என்னைக் கவர்ந்துவிட்டன.
தனக்கு தெரியாத இசை சம்மந்தப்பட்ட புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள ஏ ஆர் ரஹ்மான் ஆர்வம் காட்டுவார். படத்துக்கு இசையமைக்கக் கூட நேரம் கிடைக்காத நிலையிலும் ஹிந்துஸ்தானி கற்றுக் கொள்ள க்ளாஸுக்குப் போய் வருவார் ரஹ்மான். அதுபோல க்ளாஸிகல் இசை கற்றுக் கொள்கிறார் அனிருத் என்பதை அறிந்தேன்.
இந்த ஆர்வம் அவரை பெரிய நிலைக்குக் கொண்டு செல்லும்.
ஏ.ஆர்.முருகதாஸ் படங்களைப் பார்க்கும்போது ஏற்படுகிற திருப்தி அவர் தயாரிப்பில் உருவாகும் படங்களிலும் ஏற்படுகிறது.
சிவகார்த்திகேயன் வளர்ச்சியைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில் அவரும் முதல் நிலை வரிசைக்கு வருவார்,'' என கூறினார்.
Post a Comment