சென்னை: பாலா இயக்கும் புதிய படத்தின் தலைப்பு தாரை தப்பட்டை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இளையராஜா இசையமைக்கும் 1000வது படம் என்ற பெருமையும் இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது.
சசிகுமார் - வரலட்சுமி நடிக்கும் இந்தப் படம் கரகாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. இந்தப் படத்தில் நாதஸ்வரக் கலைஞராக சசிகுமாரும், கரகாட்டக் கலைஞராக வரலட்சுமியும் நடிக்கின்றனர்.
ஆரம்பத்தில் கரகாட்டம் என்ற தலைப்பு தற்காலிகமாக வைக்கப்பட்டது.
இப்போது படத்துக்கு தாரை தப்பட்டை என்று வைக்கப்பட்டுள்ளதாக பாலா தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமான தாரை தப்பட்டைக்காக 12 பாடல்களை உருவாக்கித் தந்துள்ளார் இசைஞானி. மதுரையைச் சேர்ந்த நாதஸ்வர கலைஞர்கள், தவில் வித்வான்களை பிரசாத் லேபுக்கு வரவழைத்து இந்தப் படத்துக்கு வாசிக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment