'அம்மா' பிறந்தநாளில் சிசேரியன் செய்து குழந்தையை எடுத்த வி.ஐ.பி. குடும்பம்

|

சென்னை: தமிழக அமைச்சரவையில் முக்கிய பதவி வகிக்கும் ஒருவரின் வாரிசு முதல்வரின் பிறந்தநாள் அன்றே தனக்கும் வாரிசு வர வேண்டும் என்று தனது மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்துள்ளார்களாம்.

தமிழக அமைச்சரவையில் முக்கிய பதவி வகிக்கும் ஒருவரின் வாரிசு வரும் தேர்தலில் தென் மாவட்ட தொகுதி ஒன்றில் போட்டியிட விரும்பினார். ஆனால் முதல்வர் அவருக்கு தொகுதியை ஒதுக்கவில்லை. இந்நிலையில் கர்ப்பமாக இருந்த வாரிசின் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை நன்றாக உள்ளது, பிரசவத்திற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். அதற்கு அரசியல் வாரிசோ என் குழந்தை முதல்வர் அம்மா பிறந்த பிப்ரவரி 24ம் தேதி தான் பிறக்க வேண்டும் என்று அடம்பிடித்தாராம். இதையடுத்து அம்மாவின் பிறந்த நாள் அன்றே அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்டது ஆண் குழந்தை ஆகும்.

குழந்தை பிறந்த நேரமாவது வாரிசுக்கு சீட் கிடைக்கிறதா என்று பார்ப்போம் என உறவினர்கள் கிசுகிசுத்தார்களாம். பதவி ஆசை படுத்தும் பாட்டை பாருங்களேன்.

 

Post a Comment