ஆடாம ஜெயிச்சோமடா படம் மூலம் வசனகர்த்தாவாக மாறியுள்ளார் நடிகர் சிவா.
‘சென்னை 600 028' படம் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து பல படங்களில் நடித்து வருபவர் சிவா.
சிவாவை வைத்து ரஜினியின் ‘தில்லு முல்லு' படத்தை ரீமேக் செய்த பத்ரி தற்போது ‘ஆடாம ஜெயிச்சோமடா' என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்துக்கு வசனம் எழுதுபவர் சிவா.
இப்படம் கிரிக்கெட் ஊழலை மையமாகக் கொண்டு பல சுவாரசியமான கற்பனை சம்பவங்கள், பல கற்பனை பாத்திரங்கள் என எல்லாவற்றையும் சேர்ந்து காமெடியாக உருவாகி வருகிறது.
இப்படத்திற்கு எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் பேரன் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் கதையை இயக்குநர் பத்ரியிடம் கேட்ட சிவா, படத்துக்கான வசனங்களை தானே எழுதுவதாகக் கூறிவிட்டாராம்.
ஆனால் படத்தில் ஒரு காட்சியில்கூட அவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment