லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் சார்பில் அவருடைய தம்பி என்.சுபாஷ் சந்திரபோஸ் தயாரிக்கும் படம், ‘இடம் பொருள் ஏவல்.' சீனு ராமசாமி இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். விஜய் சேதுபதி ஜோடியாக மனிஷா யாதவ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். விஷ்ணு ஜோடியாக நந்திதா நடித்து வந்தார்.
கொடைக்கானலில் நடந்த படப்பிடிப்பின்போது மனிஷா யாதவுக்கும், சீனுராமசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து மனிஷா யாதவ் நடித்த வேடத்தில் நந்திதாவையும், நந்திதா நடித்த வேடத்தில் மனிஷா யாதவையும் நடிக்க வைக்க சீனுராமசாமி முடிவு செய்திருந்ததாகக் கூறப்பட்டது.
ஆனால் மனீஷா யாதவ் மீடியாவிடம் சீனு ராமசாமி தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார். என்னிடம் அதற்கு ஆதாரம் உள்ளது. அதனால்தான் விலகிக் கொண்டேன் என்று முதலில் புகார் தெரிவித்திருந்தார்.
இதற்கு சீனு ராமசாமி மறுப்பு தெரிவித்திருந்தார். மனீஷாவுக்கு அந்த வேடம் பொருந்தவில்லை. அதனால்தான் மாற்றினேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் மனீஷா மீண்டும் இதுகுறித்து பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், "இடம் பொருள் ஏவல் படத்தில் நான் நடித்துக்கொண்டிருந்த வேடத்தில் நந்திதாவையும், நந்திதா நடித்துக்கொண்டிருந்த வேடத்தில் என்னையும் மாற்றினார்கள். நந்திதா நடித்த துணை கதாநாயகி வேடத்தில் நான் நடிக்க விரும்பவில்லை.
கொடைக்கானல் குளிரும் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதனால், அந்த படத்தில் இருந்து நான் விலகி விட்டேன். எனக்கும், இயக்குநர் சீனுராமசாமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மை. ஆனால், அது பேசி தீர்க்கப்பட்டு விட்டது," என்றார்.
Post a Comment