பெங்களூர்: தற்கொலைக்கு முயன்ற கன்னட நடிகையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூர் காமாட்சி பாளையாவை சேர்ந்தவர் நடிகை விந்தியா. இவரது நெருங்கிய நண்பர் மஞ்சுநாத். அவர்கள் 2 பேரும் சேர்ந்து சிம்லாவுக்கு சுற்றுலா சென்று வந்தனர். விந்தியாவுக்கும், மஞ்சுநாத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நீரிழிவு மாத்திரைகளை சாப்பிட்டு நடிகை விந்தியா தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவர் "பவுரிங்"ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மயங்கி நிலையில் இருக்கும் விந்தியாவுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து காமாட்சி பாளையா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில் விந்தியாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், 80 க்கும் அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டதால் தான் அவர் மயங்கிய நிலையில் உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் விந்தியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் கூறினார்கள்.
Post a Comment