'ஏம்பா தினேசு.. போனை எடுக்கவே மாட்டேங்குறியாமே!'

|

தமிழ் சினிமாவில் ஒரு நிருபர் போன் செய்தால் உடனே அதை எடுத்துப் பேசும் அளவுக்கு இயல்பாக உள்ள ஹீரோக்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

ஆனால் பெரும்பாலான ஹீரோக்கள் ஒரு வாரத்துக்கொரு போன் நம்பர் மாற்றுவார்கள் அல்லது யாருக்கும் தெரியாத அளவுக்கு ரகசியமாக ஒரு நம்பரை வைத்திருப்பார்கள்.

ஜெய், சூரி, சந்தானம், ஆர்யா, ஜீவா, தனுஷ், சிவகார்த்திகேயன் என இன்றைய தலைமுறை நடிகர்கள் பலரது நம்பர் எதுவென்று கேட்டால் எந்த நிருபருக்கும் தெரியாது அல்லது அவர்களிடம் உள்ள நம்பர் உபயோகத்தில் இல்லாததாகவே இருக்கும்.

'ஏம்பா தினேசு.. போனை எடுக்கவே மாட்டேங்குறியாமே!'

இந்த பட்டியலில் லேட்டஸ்டாக இடம்பெற்றுள்ள நடிகர் தினேஷ். அட்டகத்தி, குக்கூ படங்களின் நாயகன். தொடர்ந்து இரண்டு படங்கள் சுமார் ஹிட்டடித்த மிதப்பில் மீடியாக்காரர்கள் யாருடைய போனையும் எடுப்பதே இல்லையாம்.

குக்கூ பிரஸ் மீட்டுக்கு வந்திருந்த தினேஷ், மாய்ந்து மாய்ந்து பிரஸுக்கு நன்றி என்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போதுதான், ஏம்பா, இங்கே இவ்வளவு பேசறீங்க, போன் அடிச்சா எடுக்கக்கூட மாட்டேங்கறீங்க.. அவ்வளவு பெரிய ஹீரோவாயிட்டீங்களா? என ஒரு நிருபர் மடக்கினார்.

உடனே பதறுவது போல காட்டிக் கொண்ட தினேஷ், "அப்படியெல்லாம் இல்லை. நான் சினிமாவுக்கு புதுசு. நிருபர்களுக்கு பதில் சொல்லத் தெரியாம ஏதாவது உளறிட்டா என்ன பண்றதுன்னுதான், தெரியாத நம்பர்களிலிருந்து போன் வந்தா எடுப்பதில்லை. ஆனா எஸ்எம்எஸ் பண்ணா உடனே பதில் அனுப்பிடுவேன். இனிமே போன் வந்தா கண்டிப்பா எடுக்கிறேன்," என்றார்.

 

Post a Comment