வம்பு கொளுத்திப் போட்ராதீங்கப்பா! - கவுண்டமணியின் முதல் பேட்டி

|

49 ஓ அரசியல் படம்... அரசாங்கத்தை நான் குத்தம் சொல்றேன்னு ஏதும் வம்பு கொளுத்திப் போட்ராதீங்கப்பா, என கவுண்டமணி கூறியுள்ளார்.

மீண்டும் நடிக்க வந்து வாய்மை, 49 ஓ என இரு படங்களில் நாயகனாக நடிக்கும் கவுண்டமணி, முதல் முறையாக ஆனந்த விகடனுக்கு பேட்டியளித்துள்ளார்.

வம்பு கொளுத்திப் போட்ராதீங்கப்பா! - கவுண்டமணியின் முதல் பேட்டி

அந்தப் பேட்டியில், ரீ என்ட்ரியில் நகைச்சுவைக்கு பதில் சீரியஸாக நடிப்பது ஏன்? என்ற கேள்விக்கு கவுண்டமணி அளித்துள்ள பதிலில் அத்தனை எச்சரிக்கை. இதோ அவர் பதில், "நல்லா இருந்துச்சேனு போன தீபாவளிக்கு பண்ண அதிரசத்தை இன்னைக்குத் திங்க முடியுமா? அப்போ பண்ணது நல்லா இருந்தா, அதை ரசிச்சுக்கலாம். அதே மாதிரி திரும்ப நடிக்கணும்னு என்ன கட்டாயம்?

'49ஓ' படத்துல விவசாயம்தான் கதை. கதிர் அறுக்கலாம்னு நினைச்சா, மழை பெஞ்சி கெடுத்திருக்கும். நடவு நடலாம்னு நினைச்சா, வெயில் காய்ஞ்சு கெடுத்திருக்கும். வட்டிக்கு மேல வட்டி வாங்கிப் போட்ட காசை கடைசிவரைக்கும் எடுக்க முடியாமப்போனாலும், அவன் விவசாயத்தை விட மாட்டேங்கிறான். ஏன்? என்னைக்காவது நல்லது நடக்கும்னு காத்திருக்கான். ஆனா, நல்லது நடக்கிற சூழ்நிலையா இங்கே இருக்கு?''

''ஏய்ய்... இரப்பா! நான் சொன்னதை வெச்சு அரசாங்கத்தைக் குத்தம் சொல்ற படம்னு வம்பு கொளுத்திப்போட்டுராதீங்க. இயற்கை விவசாயத் துக்கு ஆதரவா நிறைய விஷயம் பேசும் படம். மத்தபடி அரசையோ, அரசியல்வாதியையோ குத்தம் சொல்றது கதையோட நோக்கம் கிடையாது. இயற்கை விவசாயி நம்மாழ்வாருக்குப் படத்துல மரியாதை பண்ணியிருக்கோம்!''

-இப்படிப் போகிறது அந்தப் பேட்டி!

 

Post a Comment