பவர் ஸ்டார் சீனிவாசன் சூப்பர் மார்க்கெட்டைச் சூறையாடிய பக்கத்து வீட்டுக்காரர்கள்!

|

பவர் ஸ்டார் சீனிவாசன் சூப்பர் மார்க்கெட்டைச் சூறையாடிய பக்கத்து வீட்டுக்காரர்கள்!

சென்னை: பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டின் கேட்டை உடைத்து ரூ 5 லட்சம் மதிப்புள்ள பொருள்களை பக்கத்து வீடுகளில் குடியிருப்போர் சூறையாடியுள்ளனர்.

இது குறித்து அவர் போலீசில் புகார் தெரிவித்தார். ஆனால் குடியிருப்போரோ, சீனிவாசன் தங்களை மிரட்டுவதாக பதிலுக்கு போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

மதுரவாயல் அருகே உள்ள வானகரம்-அம்பத்தூர் சாலையில் கோல்டன் அபார்ட்மெண்ட் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

இதில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் லத்திகா ஸ்டோர் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக இந்த கடை பூட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் நேற்று மாலை மதுரவாயில் போலீசில் ஒரு புகார் செய்தார்.

அதில் தனக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் 10-க்கும் மேற்பட்டோர் கிரில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போயுள்ளது. குடியிருப்பு சங்கத்தினர்தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

பதில் புகார்

இதேபோல் குடியிருப்பு சங்கம் சார்பில் அதன் தலைவர் புருஷோத்தமன் மற்றும் நிர்வாகிகள் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது புகார் அளித்துள்ளனர். அதில், அவர்கள் குடியிருப்பு பகுதியை ஆக்கிரமித்து பவர் ஸ்டார் சீனிவாசன் தனது சூப்பர் மார்க்கெட் முன்பு செட் அமைத்துள்ளார். அதை அகற்றக்கோரி டிசம்பர் மாதம் வரை கெடு விடுத்து இருந்தோம். ஆனால் அவர் அகற்றாததால் கிரீல் கேட்டை நாங்கள் அகற்றினோம்.

இதற்காக எங்களை அவரது தரப்பினர் மிரட்டி வருகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த புகார்கள் குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

 

Post a Comment