சென்னை: சென்னையில் ஜப்பானிய திரைப்பட விழா நேற்று தொடங்கியது.
நாளை மார்ச் 5-ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவை இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் மற்றும் ஜப்பானில் உள்ள தி ஜப்பான் ஃபவுண்டேஷன் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. தியாகராயர் நகர், தேவி ஸ்ரீதேவி திரையரங்குகளில் நடைபெறும் இந்த விழாவில் 6 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தி ஜப்பான் ஃபவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மானோ சோனரி நக்னோ, தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் செயலர் ரவி கொட்டாரக்கரா, நடிகை அனுஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
"தி போர்ட் ஆஃப் டெத்', "சாமுராய் பிரிட் ஹன்டர்' திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) மாலை "கேட் ஆஃப் ஹெல்', "எண்ட் ஆஃப் டோக்கியோ' ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.
Post a Comment