முருகதாஸ் - விஜய் படத்துக்கு தலைப்பு.. 'கத்தி'!

|

விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்துக்கு கத்தி என்று தலைப்பு வைத்துள்ளனர். இதனை இயக்குநர் முருகதாஸும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அய்ங்கரன் ஃபிலிம்ஸ் நிறுவனமும், லைகா புரொடக்ஷனும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தின் தலைப்பு குறித்து பல்வேறு செய்திகள் வந்தன. 'வாள்', 'அடிதடி', 'தீரன்' என்று படத்துக்கு பல்வேறு டைட்டில்கள் வைத்ததாக தகவல் கிளம்புவதும், பின் அதை முருகதாஸ் மறுப்பதுமாக இருந்தது.

முருகதாஸ் - விஜய் படத்துக்கு தலைப்பு.. 'கத்தி'!

ஆனால், இப்போது படத்தின் டைட்டில் 'கத்தி' என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இதை தன் ட்விட்டர் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

'கத்தி' படத்தின் ஷூட்டிங் படுவேக வேகத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் நான்கே மாதங்களில் படத்தை முடித்துவிட வேண்டுமென்று வெகுவேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறது படக்குழு.

படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

 

Post a Comment