உலகத் தமிழர்களை கொதிக்க வைத்துள்ள இனம்... கமலின் உத்தம வில்லனுக்கு நிஜ வில்லன்!!

|

இது இனமா... ராஜபக்சேவின் பணமா?

இப்படித்தான் கேள்வி எழுப்பியுள்ளனர் இனம் படத்தைப் பார்த்த தமிழ் உணர்வாளர்கள் பலரும்.

சந்தோஷ் சிவன் இதற்கு முன் ஈழப் பிரச்சினையின் பின்னணியில் டெரரிஸ்ட் போன்ற படங்களை எடுத்து கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தவர். ஆனாலும் தொடர்ந்து அவர் ஈழப் பிரச்சினையை மையமாக வைத்து படங்கள் எடுக்கிறார்.

அப்படி சமீபத்தில் அவர் எடுத்த படம்தான் இனம். இந்தப் படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வெளியிடுகிறது.

உலகத் தமிழர்களை கொதிக்க வைத்துள்ள இனம்... கமலின் உத்தம வில்லனுக்கு நிஜ வில்லன்!!

இதைவிட ஒரு அரைவேக்காட்டுத்தனமான படம் இருக்க முடியாது என்றும், திட்டமிட்டு நடந்த ஒரு கோரமான இனப்படுகொலையை மறைக்க இதுபோன்ற படங்கள் உதவும் என்றும் விமர்சனங்கள் பலமாக எழுந்துள்ளன.

ஆனாலும் பிரபல சினிமாக்காரர்கள் சிலர் இந்தப் படத்தை பாராட்டி வருகின்றனர். 'இப்படியொரு படம் மூலமாகவாவது தமிழர் படுகொலை செய்யப்பட்டதை காட்ட முடிந்திருக்கிறதே பெரிய விஷயம்' என்ற அளவில் திருப்திப்பட்டுள்ளனர்.

இது ஒரு பக்கம் இருக்க, இந்த இனம் படத்தை வெளிநாடுகளில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என உலகத் தமிழர் அமைப்புகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன.

மேலும், இந்தப் படத்தை வெளியிடும் லிங்குசாமி தயாரிக்கும் உத்தம வில்லன் படத்தையும் புறக்கணிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளன.

உத்தம வில்லன் படம் கமல் ஹாஸன் நடிக்கும் படம். ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இப்போதுதான் படப்பிடிப்பு ஆரம்பித்துள்ளது.

இந்தப் படத்துக்கு இனம் படம் நிஜ வில்லனாகியிருப்பது கமல் தரப்பை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 

Post a Comment