சென்னை: தன்னுடைய இளைய மகள் நடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் காதலில் விழுந்திருப்பது உத்தம வில்லனுக்கு கவலை அளித்துள்ளதாம்.
உத்தம வில்லன் நடிகரின் மூத்த மகள் பிசியான நடிகையாக உள்ளார். இந்நிலையில் இளைய மகள் உதவி இயக்குனராக இந்தி படங்களில் பணியாற்றி வந்தார். தாயுடன் மும்பையில் தங்கியிருக்கும் அவர் தற்போது சுள்ளான் நடிகர் நடிக்கும் இந்தி படத்தின் மூலம் நாயகியாகியுள்ளார்.
இந்நிலையில் அவர் தனது தந்தையுடன் ஜோடியாக நடித்த நடிகை ஒருவரின் மகனை தீவிரமாக காதலிக்கிறாராாம். நடிக்க வந்ததும் காதலா, வளரும் நேரத்தில் இது தேவையா என்று அவரது தந்தையும், தாயும் கவலையில் உள்ளார்களாம். அவர்களுக்கு மகளின் காதல் பிடிக்கவில்லையாம். இதையடுத்து மகளை தந்தையும், தாயும் கண்டித்தார்களாம்.
ஆனால் அவர் தனது அக்கா போன்று இல்லை. தான் நினைத்தது நடந்தே ஆக வேண்டும் என்ற பிடிவாத குணம் உள்ளவர். அதனால் பெற்றோரின் பேச்சை காதில் வாங்காமல் காதலனுடன் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறாராம்.
Post a Comment