ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.
சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடன் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக அன்றைய தினம் படம் வெளியாகவில்லை.
இதனால் மனம் உடைந்த படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக செய்தி பரவியது. இதனை சமுத்திரக்கனி மறுத்தார். படத்தை ரிலீஸ் செய்ய தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தன.
இதன் விளைவாக, ஒரு நாள் கழித்து சனிக்கிழமை மாலை படம் வெளியானது.
படத்தின் கதை, தமிழ் வசனங்களுக்கு முக்கியத்துவம் தந்திருப்பது போன்ற காரணங்களை முன்னிறுத்தி இப்படத்துக்கு அரசு முழு வரிவிலக்கு அளித்துள்ளது.
முன்பெல்லாம் படத்தின் தலைப்பு தமிழில் இருந்தாலே வரிவிலக்கு என்ற நிலை இருந்தது. இதனால் வ குவார்ட்டர் கட்டிங் என்றெல்லாம் தலைப்பு வைத்து வரிவிலக்கை அனுபவித்தனர் திரைத் துறையினர்.
இப்போது சரியான காரணங்கள் இருந்தால் மட்டுமே படத்துக்கு வரிவிலக்கு என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
Post a Comment