சென்னை: தெலுங்கு நடிகர் ராஜா, தன் திருமணத்தையொட்டி ரஜினியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி ஆசி பெற்றார்.
தெலுங்கில் பிரபலமான நடிகர் ராஜா. ஹிட் படங்களான ஆனந்த், வெண்ணிலா, ஆ நலுகுறு உள்பட 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் ராஜா.
தமிழில் கண்ணா, ஜெகன் மோகினி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த சந்திரமௌலி -உமா சந்திரமௌலி ஆகியோரின் அண்ணன் மகன் இவர்.
ராஜாவுக்கும் சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் பிரெடெரிக் வின்சென்ட்- கமலினி வின்சென்ட் அவர்களின் மகளான அம்ரிதாவுக்கும் மார்ச் 3ஆம் தேதி சென்னையில் ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டலில் வைத்து பெற்றோர்களால் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஏப்ரல் 25 ஆம் தேதி திருமணம் சென்னையில் உள்ள லீலா பேலஸில் நடைபெறுகிறது.
மணமகளின் தந்தையான பிரெடெரிக் வின்சென்ட் தனது நீண்டகால நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை திருமணத்திற்கு அழைப்பதற்காக போயஸ் கார்டனில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார். மணமக்களை ஆசிர்வதித்ததோடு திருமணத்திற்கும் வந்து வாழ்த்துவதாக உறுதியளித்தார் சூப்பர் ஸ்டார்..
தன் நண்பரை ஆரத் தழுவி தனது பழைய நினைவுகளையும் நட்பையும் பகிர்ந்து கொண்டார். அவரது குடும்பத்தினர் ஒவ்வொருவர் பெயரையும் குறிப்பிட்டு நலம் விசாரித்து நெகிழ வைத்தார் சூப்பர் ஸ்டார்.
Post a Comment