சைவம் படத்துக்காக நாசரின் கெட்-அப் இது!

|

சைவம் படத்துக்காக தன் முடியை மழித்துக் கொண்டு புதிய கெட்டப்புக்கு மாறியுள்ளார் நடிகர் நாசர்.

எந்த வேடமாக இருந்தாலும் அந்த வேடமாகவே மாறிவிடுபவர் நாசர். படத்தில் தனது கதாபாத்திரத்துக்கு ஏற்ப தனது உடல் மற்றும் முக மொழிகளை மாற்றி கொண்டு நடிப்பதில் வல்லவர்.

ஏஎல் விஜய்யின் எல்லாப் படங்களிலும் நாசருக்கு தவறாமல் ஒரு பாத்திரம் இருக்கும்.

சைவம் படத்துக்காக நாசரின் கெட்-அப் இது!

இப்போது ஏ எல் விஜய் இயக்கும் சைவம் படத்தில் முதியவர் கதாபத்திரத்திற்கு பாதி வழுக்கை விழுந்தவர் தோற்றத்தில் நடிக்கிறார் நாசர்.

தோற்றம் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தனது முடியை மழித்துக் கொண்ட நாசர், அசல் வழுக்கை தலையுடைய முதியவர் போன்று காட்சி தருகிறார்.

இந்தப் படத்துக்காக முடியை மழித்துக் கொண்டால்... மற்ற படங்களின் தொடர்ச்சி பாதிக்குமே என்பதால், நாசருக்குப் பொருத்தமான விக் ஒன்றை ஒப்பனை கலைஞர் பட்டணம் ரஷீத் செய்து கொடுத்துள்ளாராம்.

 

Post a Comment