இதற்காக யாரும் சவுந்தர்யாவையோ ரஜினியையோ அல்லது தயாரிப்பாளர்களையோ குற்றம் சொல்லவில்லை.
இந்தப் படத்தின் இயல்பு இப்படித்தான்... இவ்வளவு காலம் பிடிக்கும் என்பதை உணர்ந்து முன்கூட்டியே அதைத் தெளிவாக அறிவிக்காமல், தீபாவளிக்கு வரும், பொங்கலுக்கு வரும், இதோ ஏப்ரலில் ரிலீஸ் என்றெல்லாம் அறிவித்து, தேதிகளை மாற்றிக் கொண்டிருப்பதுதான் ரசிகர்களை கடுப்பேற்றிக் கொண்டிருக்கிறது, விமர்சகர்களை இன்னும் உசுப்பேற்றிக் கொண்டிருக்கிறது.
கடைசியாக, ஏப்ரல் 11-ம் தேதி படம் நிச்சயம் வெளியாகும்... 6000 ப்ளஸ் தியேட்டர்களில் கன்பர்ம் என்று சில தினங்களுக்கு முன்புதான் ஈராஸ் நிறுவனம் அறிவித்தது.
தொடர்ந்து இசை வெளியீட்டு விழாவை நடத்தி, ஏப்ரலில் படம் நிச்சயம் என்றனர்.
இதனால் மற்ற படங்களை வெளியிடுவதில் தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டினர்.
இந்த நிலையில் மீண்டும் ஒரு முறை வெளியீட்டுத் தேதியை மாற்றியுள்ளனர் கோச்சடையான் தயாரிப்பாளர்கள்.
ஏப்ரல் 11-ல் படம் வெளியாவது சாத்தியமில்லை என்றும், வரும் மே மாதம் படம் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார் தயாரிப்பாளர்களில் ஒருவரான டாக்டர் முரளி மனோகர்.
மே 1-ம் தேதி அல்லது 16-ம் தேதி வெளியாகக் கூடும் என்று தெரிவித்துள்ளனர்.
மே 16-ம் தேதி தேர்தல் முடிவு வெளியாகும் நாளில் கோச்சடையானும் வெளியாகும் என்கிறார்கள்.
ரஹ்மானும் ஒரு காரணம்..
இந்தப் படத்தின் தமிழ்ப் படத்துக்கு சென்சார் வாங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படம் ஏன் தள்ளிப் போகிறது என விசாரித்தபோது, இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இன்னும் பின்னணி இசை முடிக்காததுதான் முக்கிய காரணம் என்றார்கள்.
Post a Comment