கோச்சடையான் மே 1-ல் ரிலீஸாகுமா... அல்லது மேலும் தள்ளிப் போகுமா?

|

சென்னை: ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படம் வரும் மே முதல் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த தேதியை உறுதிப்படுத்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்காரர்கள் இன்று சென்னையில் கூடியுள்ளனர். இந்தத் தேதியாவது உறுதியாகுமா அல்லது வேறு தேதிக்கு மாற்றப்படுமா என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.

வருகிற 11-ந் தேதி இப்படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்விட்டது.

கோச்சடையான் மே 1-ல் ரிலீஸாகுமா... அல்லது மேலும் தள்ளிப் போகுமா?

மே 1-ந் தேதி படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், குஜராத்தி, பஞ்சாபி, ஒரியா ஆகிய மொழிகளில் இப்படம் வருகிறது. ஐப்பானிய மொழியிலும் டப்பிங் செய்து வெளியீடுகின்றனர். அனைத்து மொழி டப்பிங்கும் முடிந்து, ஏஆர் ரஹ்மானின் ஸ்டுடியோவில் பின்னணி இசைச் சேர்ப்பு நடந்து வருகிறது.

‘கோச்சடையான்' படம் ‘அவதார்', ‘டின்டின்' போன்ற ஹாலிவுட் படங்களின் தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ளது.

முதல் பாடல் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் 6000 தியேட்டர்களில் இப்படத்தை திரையிடுகின்றனர்.

தமிழகம் முழுவதும் அதிக தியேட்டர்களில் ‘கோச்சடையான்' திரையிடப்பட உள்ளதால் மே 1 முதல் மே 14-ம் தேதிவரை வெளியாகவிருந்த பல படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 

Post a Comment