சென்னை: சன் தொலைக்காட்சியில் வாரத்தில் இரண்டு முறை படையப்பா படம் போடுவது முரட்டு பெண்ணை எதிர்த்து வாக்களிக்க மறைமுகமாக சொல்லப்படுகிறதா என்று ட்விட்டரில் மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சியினரும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் மக்களும் தேர்தல் பற்றியும், பிரச்சாரக் கூட்டத்தில் தலைவர்கள் பேசுவது பற்றியும் தான் விவாதித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ட்விட்டரில் சன் தொலைக்காட்சயில் தேர்தல் நேரத்தில் வாரம் இரு முறை படையப்பா படத்தை ஒளிபரப்புவது பற்றி மக்கள் விவாதிக்கின்றனர்.
படையப்பா படத்தை ஒளிபரப்பி முரட்டு பெண்ணுக்கு எதிராக வாக்களிக்குமாறு மறைமுகமாக கூறகிறார்களா என்று ட்விட்டரில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இனிய தமிழ் மக்கள்!.
Post a Comment