டெல்லி: 2013ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த பிராந்திய படம், சிறந்த குழந்தை நட்சத்திரம், தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் கதைக்காக தலைமுறைகள் என தமிழ் திரையுலகிற்கு மொத்தம் 5 விருதுகள் கிடைத்துள்ளது.
2013ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் அறிவிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு,
ஷாஹித் இந்தி படத்திற்காக ராஜ்குமார் ராவுக்கும், பேரறியாதவர் மலையாள படத்திற்காக சூரஜ் வெஞ்சரமூடுவுக்கும் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.
சிறந்த நடிகை: கீதாஞ்சலி தாபா, படம் - லயர்ஸ் டைஸ்
சிறந்த துணை நடிகர் - சௌரப் சுக்லா, படம்- ஜாலி எல்எல்பி
சிறந்த இயக்கம் - ஷாஹித்
சிறந்த குழந்தை நட்சத்திரம்- சாதனா, படம்- தங்கமீன்கள், சோம்நாத் அவ்கதே, படம்- பந்த்ரி
சிறந்த பிராந்திய படம் - தங்க மீன்கள்
தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் படத்திற்கான நர்கிஸ் தத் விருது - தலைமுறைகள்
சிறந்த இயக்குனர் - ஹன்சல் மேத்தா, படம்- ஷாஹித்
சிறந்த பொழுதுபோக்கு படம் - பாக் மில்கா பாக்
சிறந்த பாடலாசிரியர்: நா. முத்துக்குமார், படம்- தங்க மீன்கள்
சிறந்த எடிடிங்கிற்கான நடுவர்கள் விருது- சாபு ஜோசப், படம் - வல்லினம்
தேசிய அளவில் சிறந்த படம்: ஷிப் ஆப் தீசியஸ்
சிறந்த துணை நடிகை: ஐடா எல்காஷெஃப்(ஷிப் ஆப் தீசியஸ்), பெங்காளி நடிகை அம்ருதா சுபாஷ்(ஆஸ்து)
சிறந்த பாடகர்(ஆண்): ரூபாங்கர், படம்- ஜதீஷ்வர்(பெங்காளி)
சிறந்த பாடகி(பெண்): பெலா ஷிண்டே, மராத்தி பாடல் கோடா கோடா
சிறந்த நடன அமைப்பு: கணேஷ் ஆச்சார்யா, படம்- பாக் மில்கா பாக்
சமூக பிரச்சனைகளை அலசும் படம் - குலாபி கேங்(இந்தி)
சிறந்த இந்தி படம் - ஜாலி எல்எல்பி
Post a Comment