இந்த வெள்ளிக்கிழமை விஷால் நடித்த நான் சிகப்பு மனிதன் கிட்டத்தட்ட தன்னந்தனியாகக் களமிறங்குகிறது.
விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்து நடித்துள்ள படம் நான் சிகப்பு மனிதன். திரு இயக்கியுள்ளார். விஷால் - திரு இணைந்து தரும் மூன்றாவது படம் இது. ஏற்கெனவே தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர் என இரண்டு படங்களைத் தந்திருந்தனர்.
இந்தப் படம் ஏற்கெனவே ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கும் மான் கராத்தேவுக்கு கடும் சவாலாக இருக்கும் என பாக்ஸ் ஆபீஸில் கூறப்படுகிறது.
காரணம், மான் கராத்தேவுக்கு 345 அரங்குகள் தரப்பட்டன தமிழகத்தில். இப்போது நான் சிகப்பு மனிதன் வருவதால், மான் கராத்தேவுக்கு அரங்குகள் குறைக்கப்பட்டுள்ளன. நான் சிகப்பு மனிதன் பிக்கப் ஆகிவிட்டால், மான் கராத்தேவுக்கு நெருக்கடிதான்.
காந்தர்வன்
இன்று வெளியாகும் மற்றொரு படம் காந்தர்வன். காத்தவராயன் படத்தை இயக்கிய சலங்கை துரை இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
Post a Comment