சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று சென்னையில் எளிமையாக நடந்தது.
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா இப்போது அஞ்சான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது.
அந்தப் படத்துக்கு அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தைத் தயாரிப்பது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.
இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா. படத்தின் மற்ற நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்தப் படத்தின் பூஜையை சித்திரைத் திருநாளான இன்று எளிமையாக நடத்தினார்கள். இதில் சூர்யா, வெங்கட்பிரபு, ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Post a Comment