இளம் குணச்சித்திர நடிகர்களில் முன்னணியில் உள்ள முருகதாஸுக்கு இந்த மாதம் 27-ம் தேதி திருமணம் நடக்கிறது. இது காதல் திருமணமாகும்.
ஆடுகளம், மவுன குரு, குக்கூ போன்ற படங்களில் நடித்தவர் முருகதாஸ். கடந்த இரு ஆண்டுகளில் 15 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
சிறந்த நடிகர் என பரவலான பாராட்டுகளைப் பெற்ற முருகதாஸுக்கு வரும் ஏப்ரல் 27-ம் தேதி திருமணம்.
பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்த திருமணம்தான் என்றாலும், பெண் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து, புதிய காதல் உண்டாகிவிட, இப்போது காதலிக்க ஆரம்பித்துவிட்டாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ஆமாம், வரும் ஏப்ரல் 27- ம் தேதி திருமணம். இப்போதான் என் வருங்கால மனைவியிடம் கொஞ்ச கொஞ்சமாப் பேசி லவ்வை டெவலப் பண்ணிக்கிட்டு இருக்கேன்.
அவங்க ரொம்ப அப்பாவி. என்னுடைய படங்களைப் பார்க்கும்போது 'என்னங்க தண்ணிெல்லாம் அடிக்கிறீங்க? எல்லார்கிட்டயும் அடி வாங்கிக்கிட்டு இருக்கிறீங்க?'னு எல்லாமே நிஜமா நடக்கிறதாகவே நினைச்சுடுறாங்க!', என்றார்.
Post a Comment