கிருஷ்ணதேவராயர் இல்லாத தெனாலிராமன்!

|

வடிவேலு நாயகனாக நடித்துள்ள தெனாலிராமன் படத்தில் மன்னர் கிருஷ்ணதேவராயரைக் கிண்டலடிப்பதாக சிலர் சர்ச்சை கிளப்பி வருகின்றனர்.

ஆனால், யாருக்கும் தெரியாத புதிய தகவல், அந்தப் படத்தில் கிருஷ்ணதேவராயர் என்ற ஒரு பாத்திரமே கிடையாது என்பதுதான். அட அவ்வளவு ஏன், படத்தில் எங்குமே அந்தப் பெயரைக் கூட யாரும் உச்சரிக்கவில்லையாம்.

கிருஷ்ணதேவராயர் இல்லாத தெனாலிராமன்!   

மன்னராக வரும் வடிவேலுக்குப் பெயர் மாமன்னன்.. அவ்வளவுதான். அதே போல, மன்னனின் அமைச்சரவையில், தெனாலிராமனைத் தவிர, மீதியுள்ள எட்டு அமைச்சர்களுக்கும் பெயர் கிடையாதாம். வெறும் அமைச்சர் என்றே படம் முழுக்க அழைக்கப்படுகிறார்களாம்.

கிருஷ்ணதேவராயர் பற்றி சர்ச்சை கிளம்பியபோது, இயக்குநர் யுவராஜ் தைரியமாக, படத்தை எதிர்ப்பாளர்களுக்கு போட்டுக் காட்டுகிறேன் என பதிலளித்தது இந்த காரணங்களால்தானாம்.

தெனாலிராமன் என்றாலே கிருஷ்ணதேவராயர் என்ற பெயரும் உடன் வரும். ஆனால் முதல் முறையாக, யாரோ ஒரு மன்னன்... அவன் அமைச்சரவையில் தெனாலிராமன் என வரலாற்றையும் கற்பனையையும் மிக்ஸ் பண்ணி அடித்திருக்கிறாராம் இயக்குநர் யுவராஜ்.

கற்பனையோ.. சரித்திரமோ... சுவாரஸ்யமாக இருந்தால் சரிதானே!

 

Post a Comment