எல்லாருடைய வாழ்க்கையிலும் பயணங்களின் போது கிடைக்கும் அனுபவங்கள் மறக்க முடியாததது. அந்த பயணம் தொலைத்தூர பயணமாகயிருந்தாலும் சரி, குறுகிய தூர பயணமாகயிருந்தாலும் சரி, அந்த பயணத்தின் போது கிடைக்கும் அனுபவங்கள் தான் முக்கியமானவை.
இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் கூட, பெரும்பாலும் நம்ம கூட பயணம் செய்யும் நபர்களை ஒரு முக்கிய காரணமாக கூறலாம்.
இந்த பயணத்தை மேலும் மகிழ்ச்சிகரமானதாக்க வருகிறது புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி "போலாம் ரைட்"
மகிழ்ச்சிகரமான அனுபவங்கள்
தான் விரும்பும் இடத்திற்கு செல்லும் முன் ஒரு நபருக்கு கிடைக்கும் மகிழ்ச்சிகரமான் அனுபங்களே "போலாம் ரைட்" நிகழ்ச்சியின் மையக்கரு என கூறலாம்.
இலவச பயணம்
இந்த போலாம் ரைட் ஆட்டோவில் ஏறும் அனைத்து நபர்களுக்கும் இலவசமான பயணம் மட்டுமல்லாமல், அவங்களுக்கு பிடித்த விளையாட்டுகளும், பாடல்களும், பரிசுகளும் இலவசமாக கிடைக்கிறது.
நிகழ்ச்சி தொகுப்பாளருடன்
இந்த ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத அளவிற்கு ஒரு அனுபவம் மட்டுமல்லாமல், ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளருடன் பேசிக்கொண்டே பயணம் செய்யும் ஒரு அரிய வாய்ப்பையும் இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தி தருகிறது.
மறக்க முடியாத அனுபவம்
அனைத்திற்கும் மேலாக சென்னையிலிருக்கும் கூட்ட நெரிசல் மிகுந்த ஒரு பயணத்தை மறக்க முடியாத ஒரு அனுபவமாக மாற்றுவது இந்த போலாம் ரைட் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை பரினா தொகுத்து வழங்குகிறார் .
Post a Comment