அனாமிகா படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்ததால் நயன்தாரா மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது அனாமிகா படக் குழு
இந்தியில் வித்யாபாலன் நடித்து வெற்றிகரமாக ஒடிய ‘கஹானி' படம்தான் தெலுங்கில் அனாமிகாவாகத் தயாராகி வருகிறது. தமிழில் நீ எங்கே என் அன்பே என்ற பெயரில் வருகிறது.
வித்யாபாலன் நடித்த பாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். சேகர் கம்முலா படத்தை இயக்கியுள்ளார்.
‘அனாமிகா' தெலுங்கு படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என நயன்தாராவுக்கு படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் கூறியிருந்தனர். காரணம், அதற்கு முன்பு சென்னையில் நடந்த நீ எங்கே என் அன்பே ட்ரைலர் வெளியீட்டு விழாவையும் நயன்தாரா புறக்கணித்துவிட்டார்.
நிச்சயம் வந்துவிடுவார் என்று இயக்குநர் காத்திருக்க, கடைசி வரை அனாமிகா விழாவுக்கும் நயன்தாரா வரவே இல்லை.
இந்த முறை விஷயத்தை லேசில் விடுவதாக இல்லை அனாமிகா இயக்குநரும் தயாரிப்பாளரும்.
நயன்தாரா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை நாடியுள்ளார்களாம்.
Post a Comment