ஹைதராபாத்: இயக்குநர் ராஜமவுலியின் ஷூட்டிங்கைப் பார்க்க ஆசையாக உள்ளதென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சரித்திரக் கதைகளுக்கு புது வண்ணம் கொடுத்தவர் இயக்குநர் ராஜமவுலி. இவரது மகதீரா பெற்ற மாபெரும் வெற்றி சினிமாவுலகம் அறிந்ததே.
தற்போது பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிக்க பாகுபலி என்ற சரித்திர படத்தை இயக்கி வருகிறார். பெரிய அரண்மனை செட்கள் அமைத்து இதன் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. தமிழில் 'மகாபலி' என்ற பெயரில் இந்த படம் வருகிறது.
இந்தப் படத்தின் ஷூட்டிங்கைத்தான் ரஜினி பார்க்க விரும்பி, ராஜமவுலியிடம் கேட்டுள்ளார்.
சமீபத்தில் ஹைதராபாதில் நடந்த விக்ரமசிம்ஹா அறிமுக விழாவுக்கு வந்த ராஜமவுலி, அங்கு ரஜினியைச் சந்தித்தது குறித்து இப்படிக் கூறியுள்ளார்:
ரஜினி என்னைப் போன்ற பலருக்கு காட்பாதர் மாதிரி. அவரைப் பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொரு நொடியும் பிரமிப்பாக இருந்தது. அவருடன் நெருக்கமாக நின்று படமெடுத்துக் கொண்டது சந்தோஷமாக தருணம். அவரிடம் எவ்வளவோ பேச நினைத்தும், என் உதடுகள் பேச மறந்து, அவரைப் பார்த்து சிரிக்க மட்டும் செய்தன.
சரித்திரப் படங்களை பிரமாண்டமாகவும், ஜனரஞ்சகமாகவும் எடுக்கிறீர்கள் என்று என்னைப் பாராட்டினார் ரஜினி. அதுமட்டுமல்ல, உங்கள் படப்பிடிப்பு அரங்கை காண எனக்கு ஆர்வமாக இருக்கிறது. எனவே படப்பிடிப்பு நடக்கும் போது என்னை கூப்பிடுங்கள் என்றார்.
ரஜினி இப்படிச் சொன்னதை என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாராட்டாகக் கருதுகிறேன்."
Post a Comment