பூனம் பாண்டே பிரதமராம்: இந்த கொடுமையை எங்க போய் சொல்வது?

|

மும்பை: கவர்ச்சி நடிகையும், மாடலுமான பூனம் பாண்டே பிரதமர் என்று அவரது ரசிகர்கள் ட்வீட் செய்து அதை ட்ரெண்டாகவிட்டுள்ளனர்.

பிரதமர் பதவிக்கு ஏற்கனவே பல முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் புதிதாக ஒருத்தரை வேறு அந்த நாற்காலியில் அமர வைக்க சிலருக்கு ஆசை பிறந்துள்ளது.

பூனம் பாண்டே பிரதமராம்: இந்த கொடுமையை எங்க போய் சொல்வது?

அவ்வப்போது அரை நிர்வாணம், முழு நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டு நான் இங்கு தான் இருக்கிறேன் என்று மக்களின் கவனத்தை ஈர்ப்பவர் நடிகையும், மாடலுமான பூனம் பாண்டே.

இந்நிலையில் அவரது ரசிகர்கள் சும்மா இல்லாமல் ட்விட்டரில் பூனம் பாண்டே பிரதமர் என்ற ஹேஷ்டேக்கை போட்டு அதை டிரெண்டாகவிட்டுள்ளனர். இதை பார்த்த பூனத்திற்கு உச்சி குளிர்ந்து போய் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஹா ஹா ஹா இது என்ன பூனம் பாண்டே பிரதமர் என்று அது டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இதை நம்பவே முடியவில்லை. விழுந்து விழுந்து சிரிக்கிறேன். உங்களுக்கு எப்படி இது போன்ற காமெடி ஐடியாக்கள் தோன்றுகிறது என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

Post a Comment