வடிவேலுவின் அஞ்ஞாதவாசம் முடிந்து, மீண்டும் கலகல காமெடிவாசம் ஆரம்பித்துவிட்டது.
வரும் ஏப்ரல் 18-ம் தேதி அவர் ஹீரோவாக நடித்த தெனாலிராமன் வெளியாகிறது.
அடுத்து மீண்டும் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கப் போவதாகக் கூறியிருந்தார். அந்தப் படம் தொடங்கினாலும் வழக்கம்போல காமெடி வேடங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளார்.
நான்கைந்து படங்களில் நடிக்கப் பேசி வரும் வடிவேலு, உடனடியாக ஓகே செய்திருப்பது பிரபுதேவா படத்தை.
ஏற்கெனவே பிரபுதேவா இயக்கிய போக்கிரி, வில்லு படங்களில் வடிவேலு காமெடி மிகப் பிரபலம்.
இந்திப் படத்தை முடித்துவிட்டு தமிழுக்கு வரும் பிரபு தேவா, முன்னணி நடிகரை வைத்து தன் அடுத்த தமிழ்ப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு இசை ஏ ஆர் ரஹ்மான்.
காமெடிக்கு வைகைப் புயல். பிரபுதேவா விஷயத்தைச் சொன்னதே, சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டாராம் வடிவேலு.
Post a Comment