டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளர்கள் நடத்திய விழாவில் நடிகை த்ரிஷா பங்கேற்றதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
நடிகை த்ரிஷா இப்போது கனடா சென்றுள்ளார். அங்கு தமிழர் அமைப்பு ஒன்று நடத்தும் விழாவில் பங்கேற்கிறார்.
ஆனால் இவர்கள் ராஜபக்சேவுக்கு சாதகமாக செயல்படும் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள் என்பதை பிற தமிழ் அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளனர்.
ஈழத்தில் இறுதிப் போருக்குப் பின் வெளிநாடுகளில் ஈழத் தமிழர்களின் போராட்டம் வலுவடைந்துள்ளது. அவர்களின் போராட்டங்கள் காரணமாக இலங்கை அரசு பல்வேறு சர்வதேச அழுத்தங்களைச் சந்தித்து வருகிறது.
இந்தப் போராட்டங்களை பலவீனப்படுத்த, தமிழரின் பலவீனமான சினிமாத் துறையில் பெரும் பணத்தை பாய்ச்சுகின்றனர்.
பல்வேறு மறைமுக வழிகளில் ராஜபக்சே குடும்பத்தினர் தங்கள் பணத்தை தமிழ் திரைத்துறையில் முதலீடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் இந்த சூழ்ச்சிகள் புரியாமல் தமிழ் திரைத்துறையினர் அவர்கள் வலையில் விழுந்துவிடுகின்றனர்.
இப்போது த்ரிஷாவும் அப்படித்தான் சிக்கியிருக்கிறார் போலிருக்கிறது. காரணம் முன்பு சிங்கள அரசு கூப்பிட்டும் இலங்கை போக மறுத்தவர்தான் த்ரிஷா என்பது நினைவிருக்கலாம்.
Post a Comment